தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவியேற்று இரண்டு வருடங்களை நெருங்கிய நிலையில், மாகாண சபை தேர்தலை நடத்தாமல் பின்போட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் வெள்ளிக்கிழமை (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.