எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேர்தல் காலத்தில் விவசாயியின் மகன் என்று கூறி ஆட்சியைக் கைப்பற்றிய ஜனாதிபதி, தற்போது விவசாயிகளின் அடிப்படை உரிமைகளை அப்பட்டமாக மீறுவதாக குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.