மாகாணசபைத் தேர்தல் முறைமை குறித்து ஆராய்வதற்கான பாராளுமன்ற விசேட செயற்குழுவிற்கும், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒன்றியத்திற்கும் இடையில் அண்மையில் பாராளுமன்றத்தில் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான இந்த விசேட குழுவில், பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவரும் அமைச்சருமான சரோஜா சாவித்ரி போல்ராஜ் தலைமையில் ஒன்றிய உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்த சந்திப்பில் மாகாணசபைத் தேர்தல்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் மாற்று தேர்தல் முறைகள் குறித்து விரிவான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.