6வது பாகிஸ்தான்-இலங்கை பாதுகாப்பு கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு! | Virakesari.lk 04.07.2026

இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சக செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) முஹம்மது அலி ஆகியோர் இணைத் தலைமை தாங்கிய 6வது பாகிஸ்தான்-இலங்கை ஆயுதப்படைகள் பாதுகாப்பு கலந்துரையாடல், கடற்படைத் தலைமையகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் இரு நாடுகளின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த வருடாந்த கலந்துரையாடல், தற்போதைய பாதுகாப்பு ஒத்துழைப்பை மதிப்பாய்வு செய்யவும், புதிய ஒத்துழைப்பு வழிகளை ஆராயவும் ஒரு தளமாக அமைந்தது. கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, திறன் மேம்பாடு, பிராந்திய பாதுகாப்பு மற்றும் இராணுவப் பயிற்சி உள்ளிட்ட பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் குறித்து விரிவான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.

Virakesari Full Article












