இலங்கை சுங்கத் திணைக்களம் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்குள், நிர்ணயிக்கப்பட்ட 1,060.5 பில்லியன் ரூபா வருமான இலக்கை விஞ்சி, 1,373.7 பில்லியன் ரூபாவை ஈட்டி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. திறமையான முகாமைத்துவம் மூலம், இலக்கை விட 313 பில்லியன் ரூபா மேலதிகமாக ஈட்டப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டிற்கான மொத்த இலக்கு 2,206 பில்லியன் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போதைய வருமானப் போக்கின்படி, கடந்த ஆண்டு ஈட்டப்பட்ட 2.5 ட்ரில்லியன் ரூபா சாதனையை இந்த ஆண்டு முறியடிக்கும் என சுங்க ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா நம்பிக்கை தெரிவித்துள்ளார். எனினும், மோட்டார் வாகன இறக்குமதிக் கட்டுப்பாடுகளால் வாகனத் துறையிலிருந்து வருமானம் குறைந்துள்ளது.