வெருகல் - பூநகர் பகுதியிலுள்ள பனிச்சங்குளத்தின் புனர் நிர்மாண வேலைகள் ஆரம்பம்! | Virakesari.lk 05.07.2026

திருகோணமலை மாவட்டம் வெருகல் - பூநகர் பகுதியில் அமைந்துள்ள பனிச்சங்குளத்தின் புனர் நிர்மாணப் பணிகள் சனிக்கிழமை (04) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டன. திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் இந்தத் தொடக்க விழாவைத் தொடங்கி வைத்தார். இத்திட்டமானது பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதித் திட்டத்தின் கீழ், சுமார் 1.5 மில்லியன் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படவுள்ளது. தொடக்க நிகழ்வின் போது மத அனுஷ்டானங்களுடன் அடிக்கல் நாட்டப்பட்டது. இம்நிகழ்வில் வெருகல் பிரதேச சபையின் தவிசாளர் சேதுராமன் கருணாநிதி, வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ், மற்றும் வெருகல் கமநல சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் குமார் சாந்தகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், வெருகல் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் விவசாய சங்கத்தினர் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் இம்நிகழ்வில் பங்கேற்றுத் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். இந்தத் திட்டமானது அப்பகுதி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.















