** கிழக்கு மாகாண மாநகரத்திற்கான உயர்ஸ்தானிகர்கள் இசபெல் மார்ட்டின் (கனேடா) மற்றும் அன்ட்ரூ (பிரித்தானியா) திருகோணமலை மாநகர முதல்வர் க.செல்வராஜா, பிரதி முதல்வர் ஜனாப் மௌசூம், மாநகர ஆணையாளர் உ.சிவராசா ஆகியோரை புதன்கிழமை (6) காலை 10.30 மணியளவில் மாநகர சபை முதல்வர் அலுவலகத்தில் சந்தித்து, நகரத்தின் தேவைகள், எதிர்கால அபிவிருத்தி, வடகிழக்கு பகுதியில் நிலவும் அரசியல் சூழ்நிலை, மாநகர உட்கட்டமைப்பு, சுற்றுலா, இளைஞர்களின் வாய்ப்புகள், 13வது திருத்தம், மாகாண சபை தேர்தல், மீனவர்களின் பொருளாதார சிக்கல்கள் மற்றும் வேலைவாய்ப்பு பற்றாக்குறை போன்ற பல முக்கிய விஷயங்களைப் பற்றி விசேடமாக கலந்துரையாடினர்.