கொழும்பில் கோலாகலமாக நடைபெறவுள்ள 2026 டிராகன் படகு கலாசார விழா | Virakesari.lk 02.06.2026

சீனாவின் பாரம்பரிய டிராகன் படகு கலாசார விழாவை முன்னிட்டு, விளையாட்டு, கலாசாரம் மற்றும் உணவுப் பாரம்பரியத்தை ஒருங்கிணைக்கும் 2026 டிராகன் படகு கலாசார விழா மற்றும் சீனா – இலங்கை நட்புறவுக் கிண்ண டிராகன் படகு போட்டி எதிர்வரும் 13ஆம் திகதி கொழும்பு போர்ட் சிட்டி பீச் பிளாசாவில் நடைபெறவுள்ளது. இலங்கைக்கான சீனத் தூதரகம் மற்றும் இலங்கை இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் இந்த நிகழ்வில், டிராகன் படகு வேகப்போட்டிகளுடன், சீனாவின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், இலங்கை இராணுவத்தின் நிகழ்ச்சிகள், மற்றும் பல்வேறு சீன உணவுகளை சுவைக்கும் அனுபவமும் வழங்கப்படும். மேலும், சோங்ஸி தயாரிக்கும் நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகள், மற்றும் விளையாட்டுப் போட்டிகள் போன்ற கலந்துரையாடல் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இது விளையாட்டு மற்றும் கலாசார பரிமாற்றத்தின் ஊடாக சீனா – இலங்கை நட்புறவை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாக அமையும்.



















