சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் செயற்திட்டத்தை 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் 5 மற்றும் 6 ஆவது மீளாய்வுகள் வெற்றிகரமாக நிறைவடைந்து, 695 மில்லியன் டொலர் தொகை (6 மற்றும் 7 ஆம் தவணைகள்) திறைசேரிக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். நாணய நிதியத்தின் நிபந்தனைகள் மற்றும் பரிந்துரைகள் சிறந்த முறையில் அமுல்படுத்தப்பட்டதால், நாட்டின் நிதி ஒழுக்கம் உறுதிப்படுத்தப்பட்டு பொருளாதாரம் மீட்சி பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் மேலும் இரண்டு தவணை கடன்தொகை கிடைக்கப்பெறவுள்ளன. நாணய நிதியத்தின் ஒத்துழைப்பால் நாட்டின் நிதி கையிருப்பு வலுப்படுத்தப்பட்டு, வெளிநாட்டு மற்றும் ரூபாயின் கையிருப்பு ஸ்திரத்தன்மை அடைந்துள்ளது.