எம்பிலிபிட்டிய-நோனாகம வீதியில், சுதுபாலம பகுதிக்கு அருகில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றின் களஞ்சிய அறையில் புதன்கிழமை (03) அன்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், தீக்காயங்களுக்கு உள்ளான மற்றும் நச்சுப் புகையை சுவாசித்த சுமார் 22 பெண் ஊழியர்கள் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அம்பாந்தோட்டை மற்றும் எம்பிலிபிட்டிய தீயணைப்புப் பிரிவினர் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். இந்த விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். எம்பிலிபிட்டிய பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.