இம்மாதத்தின் முதல் நான்கு நாட்களில் 4,251 டெங்கு நோயாளர்கள் பதிவு ! | Virakesari.lk 05.07.2026

இலங்கையில் டெங்கு காய்ச்சல் பரவல் இந்த ஆண்டில் கணிசமாக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று சனிக்கிழமை (04) நள்ளிரவு வரையிலான தரவுகளின்படி, நாடு முழுவதும் இதுவரை 59,638 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்டன், 39 மரணங்களும் பதிவாகியுள்ளன. இதன் மூலம் தற்போதைய மரண வீதம் 0.07% ஆகக் காணப்படுகிறது. குறிப்பாக, ஜூலை மாதத்தின் முதல் நான்கு நாட்களில் மட்டும் 4,251 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர், இது கடந்த ஜூன் மாதத்தில் பதிவான 21,546 நோயாளர்களை விடக் குறைவானது என்றாலும் கவலைக்குரியது. மாகாண ரீதியாகப் பார்க்கையில், மேல் மாகாணம் 31,249 நோயாளிகளுடன் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் கொழும்பு மாவட்டத்தில் 12,158 பேரும், கம்பஹாவில் 11,925 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு வேகமாகப் பரவும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் 142 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் அதிவேக அபாய வலயங்களாக தற்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.















