யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல் நகர் வளாக நுழைவாயிலில் உள்ள பெயர்ப் பிழை தொடர்பாக, தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். நுழைவாயிலில் "யாழ்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை" எனத் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அது "யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை" எனத் திருத்தப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் மொழியின் எழுத்து மரபு மற்றும் கல்வி நிறுவனங்களின் அடையாளங்களைப் பாதுகாக்கும் நோக்கில், இந்த விடயத்தில் கவனம் செலுத்தி உரிய திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் கோரியுள்ளார். பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ பெயர் சரியான முறையில் பயன்படுத்தப்படுவது அவசியம் என்பதை அவர் வலியுறுத்தியுள்ளார்.