மட்டக்களப்பு மாவட்டத்தில் எல் நினோ தாக்கத்தால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க, சுமார் 9,000 குடும்பங்களுக்கு பவுசர்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மக்களின் அத்தியாவசிய நீர் தேவையை பூர்த்தி செய்ய தனியார் துறையின் பங்களிப்பையும் பெற்றுக்கொள்ளுமாறு வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.