ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் விஜேதாச ராஜபக்ஷ, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது சத்தியப்பிரமாண உறுதிமொழியை மீறி, திட்டமிட்டு அரசியலமைப்பை அப்பட்டமாக மீறியுள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளார். உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை நியமிக்காமல் புறக்கணிப்பதன் மூலம் ஜனாதிபதி இந்த மீறலை செய்துள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது அரசியலமைப்பின் அடிப்படை கடமைகளில் இருந்து ஜனாதிபதி தவறிய செயல் என்றும் அவர் கூறியுள்ளார்.