வவுனியா, கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியில் ஏ9 பிரதான வீதியில் நேற்று (02) செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில், யாழ். மாவட்ட முன்னாள் அரச அதிபர் இமெல்டா சுகுமாரின் புதல்வர் அடங்கிய இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கனகராயன்குளம் பெரியகுளம் பகுதிக்கு அருகில் வீதியால் பயணித்த இரு இளைஞர்கள் மீது சொகுசு கார் மோதியதில் இந்த உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன. விபத்துக்குள்ளான சொகுசு காருக்குப் பின்னால் வந்த ஹயஸ் ரக வாகனமும் விபத்துக்குள்ளானது. உயிரிழந்த இருவரும் கனகராயன்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களில் ஒருவர் முன்னாள் அரச அதிபர் இமெல்டா சுகுமாரின் புதல்வர் அட்புதராஜா தர்சன் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.