ஹொரணை பகுதியில் உள்ள அரச வங்கியொன்றின் ஏ.டி.எம் இயந்திரங்களில் நிரப்புவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட 3.5 கோடி ரூபா பணம், இனந்தெரியாத நபரொருவரால் புதன்கிழமை (3) பிற்பகல் திருடப்பட்டுள்ளது. வங்கியின் பின்புறமாக பணப்பைகளை எடுத்துச் சென்ற ஊழியரிடமிருந்து, சந்தேகநபர் பலவந்தமாக பணப்பைகளைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பவம் பிற்பகல் 2.55 மணியளவில் இடம்பெற்றுள்ளது. திருடப்பட்ட பணம் ஏ.டி.எம் இயந்திரங்களில் வைப்பதற்காகக் கொண்டு செல்லப்பட்ட பணமென பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. சந்தேகநபர் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.