‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நிதி நன்கொடை | Virakesari.lk 03.06.2026

இலங்கையில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு, வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையரான Lawrence Errol Coomarawel Marti என்பவர் தனிப்பட்ட நிதியிலிருந்து 10 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்த நன்கொடைக்கான காசோலை, கடந்த 29ஆம் திகதி ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தியிடம் கையளிக்கப்பட்டது. இந்த நிதி, நாட்டில் ஏற்படும் இயற்கை பேரழிவுகள் மற்றும் பிற நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.

Virakesari Full Article















