விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, நாட்டின் வரி வருமானத்தில் கணிசமான பகுதி விவசாய சமூகத்திற்காக செலவிடப்படுவதாக தெரிவித்தார். "நீர்ப்பாசன பெருமை - எமது மரபுரிமை" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மகா மங்கடவல குளக்கட்டு புனரமைப்பு மற்றும் மதகுடன் கூடிய அணைக்கட்டு கட்டுமானப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.