டெங்கை கட்டுப்படுத்த வெளியிடப்பட்ட சுற்றறிக்கை குறித்து ஆராய்வு! | Virakesari.lk 04.07.2026

டெங்கு தொற்றின் அபாயத்தைக் கட்டுப்படுத்துவதற்கான சுற்றறிக்கையின் முன்னேற்றம் மற்றும் தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. 2026 ஜூன் 23 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு அமைய, டெங்கு ஒழிப்புத் திட்டங்கள், அதிஅபாய வலயங்களில் பரவலைத் தடுத்தல், புகையடித்தல் நடவடிக்கைகளை அதிகரித்தல், மற்றும் டெங்கு கட்டுப்பாட்டு செயல்பாட்டு அறையின் தகவல்கள் போன்றவை ஆராயப்பட்டன. டெங்கு கட்டுப்பாட்டுக்கு புதிய வழிமுறைகள், பொதுமக்களின் ஈடுபாடு, பொது சுகாதாரப் பரிசோதகர்களின் பங்கு, மற்றும் வீடுகள் சார்ந்த தூய்மைப் பணிகள் ஆகியவற்றின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.

Virakesari Full Article












