திருகோணமலை மாவட்டத்தில் நீண்ட கால வறட்சியான காலநிலைக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (01) மாலை கனமழை பெய்தது. எல்நினோ காலநிலை தாக்கத்தால் ஏற்பட்ட அதிக வெப்பம் மற்றும் மழையின்மை காரணமாக குளங்கள் வற்றி வரண்ட நிலை காணப்பட்டது. இந்நிலையில் பெய்த மழையால் சூடு ஓரளவு தணிந்துள்ளது.