உலக வங்கி பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதியின் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு | Virakesari.lk 06.05.2026

இலங்கையில் வருமானம் ஈட்டும் அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் திட்டங்கள், மற்றும் அரச ஊழியர்களின் நேர்மையைப் பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்கள் குறித்து உலக வங்கியின் இலங்கைக்கான முகாமையாளர் கெவர்க் சர்க்ஸியன் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுடன் இன்று (6) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் விரிவாகக் கலந்துரையாடினர். அரச நிறுவனங்களின் மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கலுக்கு உலக வங்கியின் ஆதரவை வழங்குவது மற்றும் இதற்காக ஜனாதிபதி செயலகத்தில் நிறுவப்பட்டுள்ள 'பொது நிர்வாகம், மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் பணியகத்துடன்' இணைந்து பணியாற்றுவது குறித்தும், அதேபோல் அரச நிறுவன அதிகாரிகளின் நேர்மையைப் பேணுவதற்காக நிறுவப்பட்டுள்ள 'உள்ளக விவகாரப் பிரிவு' சார்ந்த வேலைத்திட்டங்களில் இணைந்து செயல்படுவதன் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.


















