உயர்கல்வித்துறையில் மறுசீரமைப்பை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது - பிரதமர் | Virakesari.lk 06.05.2026

பல்கலைக்கழகங்களில் 3000க்கும் மேற்பட்ட விரிவுரையாளர் வெற்றிடங்கள் நிரப்பப்பட்டு வருவதாகவும், கல்வி சாரா ஊழியர் வெற்றிடங்களும் பூர்த்தி செய்யப்பட்டு வருவதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார். உயர்கல்வித்துறையில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதுடன், இது தொடர்பாக ஆராய்வதற்காக ஒரு விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது. 2025-2026 ஆம் ஆண்டுக்கான இரண்டு புதிய பாடநெறிகள் செப்டம்பர் முதல் வாரத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. பல்கலைக்கழக அனுமதிக்கான தகுதி பெற்ற 1,76,530 மாணவர்களில் 42,937 பேர் பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். உயர்கல்வி என்பது பல்கலைக்கழகங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டது அல்ல, அது தொழில் கல்வி உட்பட விரிவானது என்றும், தற்போதைய சிக்கல்களை ஆராய்ந்து, எதிர்கால மறுசீரமைப்பிற்கான பரிந்துரைகளை அந்தக் குழு வழங்கும் என்றும் பிரதமர் கூறினார்.



















