பொருளாதார நெருக்கடி இனி ஒருபோதும் நாட்டில் ஏற்படாது ; உத்தரவாதம் அளிக்கிறேன் - மத்திய வங்கியின் ஆளுநர் | Virakesari.lk 02.06.2026

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் நந்தலால் வீரசிங்க, 2022 இல் ஏற்பட்டதைப் போன்ற பொருளாதார நெருக்கடி இனி ஒருபோதும் நாட்டில் ஏற்படாது என உறுதியளித்துள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலை தீவிரமடைந்து, ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான செலவுகள் அதிகரித்துள்ளன. இதனால், பணவீக்கம் தற்போதைய 5.5 சதவீதத்திலிருந்து எதிர்வரும் மாதங்களில் 7 சதவீதமாக உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கேள்வியை சமப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நாணயக் கொள்கை கடுமையாக்கப்பட்டுள்ளது. 2022 இல் ஏற்பட்ட நெருக்கடி உள்ளகத் தவறான தீர்மானங்களால் ஏற்பட்டதாகவும், தற்போதைய நெருக்கடி பூகோள போர்ச்சூழலால் ஏற்பட்ட அழுத்தங்களால்தான் எனவும், இதனைச் சிறப்பாக நிர்வகிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை, ரூபா மற்றும் டாலர் கையிருப்பு, மற்றும் பணவீக்கம் அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

















