கனகராயன்குளத்தில் விபத்து: உழவு இயந்திரம் மோதி இளைஞன் பலி! | Virakesari.lk 03.06.2026

வவுனியா, கனகராயன்குளம், குறிசுட்டகுளம் பகுதியில் நேற்று (02) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற துயரச் சம்பவத்தில், 20 வயது இளைஞன் ஒருவர் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காளி கோயிலில் வேலை செய்வதற்காக உழவு இயந்திரத்தை இயக்கியபோது, அவர் தவறி இயந்திரத்துக்குள் வீழ்ந்ததில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. குறிசுட்டகுளம் பகுதியைச் சேர்ந்த இந்த இளைஞரின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Virakesari Full Article














