ஜூன் மாதத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை திருத்தம் நாளை | Virakesari.lk 03.06.2026

லிட்ரோ நிறுவனம், ஜூன் மாதத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை நாளை (வியாழக்கிழமை) அறிவித்து, நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் அமுல்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த மாதாந்திர விலை திருத்தம், சர்வதேச சந்தையின் தற்போதைய நிலைமைகள் மற்றும் உலகளாவிய எரிவாயு விலைப் போக்குகளின் அடிப்படையில் அமையும். விலை திருத்தத்திற்கான அறிக்கைகள் நிதி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இறுதி மதிப்பீடு இன்று (03) புதன்கிழமை கிடைக்கும் எனவும் லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உள்நாட்டு எரிவாயு விலைகளை சீரமைக்கும் நோக்குடன் இந்த திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.

Virakesari Full Article















