பொருளாதார பாதிப்பைக் குறைக்கும் நோக்கத்துடன் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத் தலைவர் எஸ். ராஜகருணா தெரிவித்துள்ளார். அரசியல் நோக்கங்களுக்காக அரசியல்வாதிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்துள்ளார். எரிபொருள் விலை உயர்வு நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாத வகையில் கவனமாக மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இந்த விலை உயர்வு, பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகும் என்றும், தேவையற்ற அரசியல் விமர்சனங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.