துபாயில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் மற்றும் போதைப்பொருள் வர்த்தகரான மாவத்த சாமரவிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், கொழும்பு மாதம்பிட்டிய பொது மயானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு துப்பாக்கிகள் மற்றும் ஏழு தோட்டாக்கள் மத்திய குற்றப்புலனாய்வுப் பணியகத்தினரால் மீட்கப்பட்டுள்ளன. சர்வதேச பொலிஸாரின் சிவப்பு எச்சரிக்கைக்கு அமைய மே 21 ஆம் திகதி நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட 39 வயதுடைய சந்தேகநபர், நீதிமன்ற நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்காக வெளிநாடு தப்பிச் சென்றவர். இவற்றில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 9 மில்லிமீட்டர் தானியங்கி துப்பாக்கி, இரண்டு மெகசின்கள், நான்கு 9 மில்லிமீட்டர் தோட்டாக்கள் மற்றும் மூன்று 7.6 மில்லிமீட்டர் தோட்டாக்கள் ஆகியவை அடங்கும்.