இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யஞ்சல் பாண்டேவுக்கு இலங்கை கோபியோ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த பிரியாவிடை நிகழ்வு நேற்று (2) கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், கோபியோ அமைப்பின் தலைவர் எஸ். சண்முகநாதன் துணை உயர்ஸ்தானிகருக்கு பரிசில் வழங்கி கௌரவித்தார். அமைப்பின் உப தலைவர் ஜெயகருணாகரன், செயலாளர் நாயகம் விஜேவேல் மற்றும் கோபியோ அங்கத்தவர்கள் கலந்துகொண்டு துணை உயர்ஸ்தானிகருடன் உரையாடினர். இந்த நிகழ்வின் புகைப்படங்கள் ஜே. சுஜீவகுமார் அவர்களால் எடுக்கப்பட்டன.