முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தனக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சதித்திட்ட குற்றச்சாட்டை தொடர முடியும் என்ற உத்தரவை எதிர்த்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் புதன்கிழமை (3) அனுமதி வழங்கியுள்ளது. இந்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஜூன் மாதம் 16ஆம் திகதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. மேல் நீதிமன்றத்தின் உத்தரவு சட்டத்திற்குப் புறம்பானது என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.